நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்குப்பதிவு! காரணம் என்ன?

Report Print Kabilan in இந்தியா

சர்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம், கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. படம் வெளியான பிறகு, தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர்.

மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, படக்குழுவினர் சில காட்சிகளை நீக்கினர். அதன் பின்னர் சென்னையில் சர்கார் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, திருச்சூர் சுகாதாரத்துறை வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதாநாயகன் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers