ராணுவத்தில் விருப்ப ஓய்வுக்கு மனு அளித்த வீரர்... பயங்கரவாதிகளால் படுகொலை: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

ராணுவத்தில் கட்டாய ஓய்வுக்கு மனு அளித்துள்ளதாக குடும்பத்தாரிடம் அறிவித்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளது அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜவான் ஆன்றணி செபஸ்டியான். கடந்த அக்டோபர் மாதம் ஊருக்கு திரும்பியபோது தாயாரிடம் தாம் கட்டாய ஓய்வுக்கு மனு அளிக்க இருப்பது தொடர்பில் பேசியுள்ளார்.

ஆனால், மனு அளித்துள்ளதாக தெரிவித்த அடுத்த நாள் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு பலியாகியுள்ளார். குறித்த தகவல் அறிந்த தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறியது கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவத்தில் 15 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் அவர் கட்டாய ஓய்வுக்கு மனு அளித்துள்ளார்.

ஆனால் சில காரணங்களால் அவரது மனு பரிசீலிக்கப்படுவதில் தாமதமாகியுள்ளது. தற்போது ஊருக்கு சென்று திரும்பிய நிலையில் மீண்டும் மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஊருக்கு திரும்ப முடியும் என தாயாரிடம் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ராணுவ வீரர் ஆன்றணி சென்பஸ்டியானின் வீர மரணம், அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல, அவரது சொந்த கிராம மக்களுக்கே நம்ப முடியாதவகையில் அமைந்துள்ளது. 34 வயதான ஆன்றணிக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

ஜவான் ஆன்றணி கொல்லப்பட்ட அன்று ஹவில்தார் மாரிமுத்து படுகாயத்துடன் மீட்கப்பட்டு பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers