இளம் பெண்ணை எக்ஸ்ரே எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா என்ற இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித்திரிந்துள்ளார்.

பல நாட்களாக அப்பகுதியிலே சுற்றித்திரிந்ததால், இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதிப்பதற்காக, ஸ்கேன் எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அவரின் வயிற்றில் ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்தது.

கொண்டை ஊசி, சேப்டி பின், கூரிய ஆணி என இரும்பால் ஆன சின்னச்சின்ன பொருள்கள் இருந்தன. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

2 மணி நேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்கையில் சங்கீதாவின் வயிற்றிலிருந்த இரும்புப்பொருள்கள் அகற்றப்பட்டன.

சங்கீதாவுக்கு இரும்புப் பொருளை விழுங்கும் வினோத மனநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers