அண்ணனுடன் காதல்: திருமணமான 2ம் நாளில் புதுப்பெண்ணின் விபரீத முடிவு

Report Print Kavitha in இந்தியா

தேனி மாவட்டத்தில் திருமணம் முடிந்து விருந்துக்காக சென்ற மணப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21).

இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்த போது ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவர் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.

இந்நிலையில் தங்கை உறவு முறை உள்ள ரம்யாவும் முத்துகிருஷ்ணனும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பல முறை எடுத்துச் சொல்லி அவர்களை பிரிக்க பார்த்தனர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால் ரம்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதன் போது விருந்து நடந்து கொண்டு இருந்த வேளையில் போது அருகில் இருந்த ஒரு வீட்டில் புதுப்பெண் ரம்யாவும், முத்து கிருஷ்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர்.

மணப்பெண் ரம்யா வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார், முத்துகிருஷ்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் முத்துகிருஷ்ணனும் ரம்யாவும் காதலித்து வந்த நிலையில் இதனை பெற்றோர்கள் மறுத்துள்ளனார்.

இதனால் வேதனையடைந்த ரம்யாவும், முத்துகிருஷ்ணனும் வி‌ஷம் குடித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers