கணவரை தவிக்க விட்டு இளைஞருடன் திருமணம்! மனைவியை துடிதுடிக்க கொன்றது ஏன்?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியை கொன்ற கணவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆண்டிப்பட்டு அருகே ராமலிங்கா புரத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி முருகலெட்சுமி(வயது 34), இவர்களுக்கு பிரேம்நாத்(வயது 14), ஹரிபிரசாத்(வயது 10) என இரு மகன்கள் இருக்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் குன்னூர் அருகே இருக்கும் ஆற்றுப்பாலத்தில் முருகலெட்சுமி சடலமாக கிடந்தார்.

விவரம் அறிந்த பொலிசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர், கண்ணனிடம் விசாரித்ததில் பொலிசுக்கு சந்தேகம் வலுத்தது.

இதன்பின்னர் பொலிசின் கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது மனவைிக்கும், வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

எனக்கு தெரியவந்ததால் அவரை கண்டித்தேன், ஆனாலும் தொடர்பு நீடித்தது, ஒருகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கினார்.

எனவே அவர் பெயரில் இருந்த சொத்துகளை என் பெயருக்கு மாற்ற முயன்றேன், இதற்கு அவர் சம்மதிக்காததால் கடும் கோபத்தில் இருந்தேன்.

இதற்கிடையே சம்பவதினத்தன்று ராமலிங்கா புரத்துக்கு வந்த முருகலெட்சுமியிடம் நைசாக பேசி, ஆட்டோவில் அழைத்து சென்று கொலை செய்தேன்.

என் பெற்றோரின் உதவியுடன் அவரது சடலத்தை ஆற்றில் வீசிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கண்ணன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers