வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய பெண் செய்த அதிர்ச்சி செயல்: வசமாக சிக்கிய பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பெண், தங்க கட்டிகளை கடத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோஷினி கோத்தாடியா என்ற பெண் நேற்று காலை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அவரை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அதில் ரோஷினி பையில் தலா 100 கிராம் எடை கொண்ட 5 தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்தது.

அதற்கான முறையான ஆவணங்களை அவர் வைத்திருக்கவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் ரோஷினியிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் வசிக்கும் தனது மாமனார் தங்ககட்டிகளை பரிசாக கொடுத்ததாக கூறினார்.

ரோஷினி கடந்த 15-ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 15 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளுடன் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகளிடம் ரோஷினி ஒப்படைக்கப்பட்டதோடு, தங்ககட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்ட விசாரணை வரி ஏய்ப்பில் ரோஷினி ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்