விவசாயிகளின் கோடிக்கணக்கான கடன்களை அடைத்த பிரபல திரைப்பட நடிகர்: குவியும் பாரட்டு

Report Print Santhan in இந்தியா
200Shares

பிரபல திரைப்பட நடிகரான அமிதாப்பச்சன் கடனில் சிக்கித் தவிக்கும் 1398 விவசாயிகளின் கடன் தொகையான 4.05 கோடி ரூபாயை அடைத்திருக்கும் செயல், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

நடிகரான அமிதாப்பச்சன் திரையுலகில் பிரபலமாகி டெல்லியில் செட்டில் ஆகிவிட்டாலும், தன் தாய் மண் மீது அவருக்கும் எப்போதும் தனிப்பட்ட பாசம் உண்டு என்றே கூறலாம்.

உத்திரப்பிரதேசத்தில் கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகி வருகிறது. இதனால் இப்படி கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடனை அடைக்க அமிதாப் முடிவு செய்துள்ளனர்.

அதன் படி 1,398 விவசாயிகளின் கடன் தொகை 4.05 கோடியை அமிதாப் அடைத்தார்.

அதோடுமட்டுமின்றி கடனை அடைத்த விவசாயிகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 70 பேரை மும்பைக்கு அழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து வங்கிக் கடனை அடைத்தற்கான கடிதங்களை அவர்களிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக லக்னோவிலிருந்து மும்பை வரும் ரயிலில் ஒரு பெட்டி முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 26- ஆம் திகதி மும்பை வரும் விவசாயிகளிடத்தில் வங்கிக் கடிதங்களை அவர்களிடத்தில் வழங்குகிறார். அமிதாப்பின் செய்தி தொடர்பாளர் இதை உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களை அமிதாப் அடைத்தார். அதுபோல் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த 44 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அமிதாப் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்