கவிஞர் வைரமுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.
தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அழிவை சந்தித்துள்ளன. பல கால்நடைகள், ஏராளமான மரங்கள் இந்த புயலுக்கு பலியாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இந்த புயலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எழுதிப் பிழைக்கும் இந்த எளிய கவிஞன், தமிழர் மறுசீரமைப்புக்காக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவழி அனுப்பியிருக்கிறேன். இந்த சிறுதொகை, ஐந்து ஜோடிக் கண்களின் கண்ணீரைத் துடைத்தால் அதுபோதும் எனக்கு’ என தெரிவித்துள்ளார்.