மணமகன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: ரத்தக்கறையுடன் தாலி கட்டிய சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
179Shares

இந்திய தலைநகர் டெல்லியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மணமகன் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் திருமண மண்டபத்திற்கு செல்லும் வழியில் மணமகன் பாதல் என்பவருக்கு வலது தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

உடனே அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் பாதல் மண மேடைக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி திருமணம் முடிந்த பின்னர் சில மணி நேரங்களில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட பாதலுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில், துப்பாக்கி குண்டை வெளியே எடுக்க அவர் மறுத்துள்ளார்.

தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு சிக்கியிருப்பதாகவும் உடனையே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இருப்பினும் 3 மணி நேர முதலுதவிக்கு பின்னர் பாதல் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். திருமண உடையில் ரத்தக்கறை தோய்ந்த நிலையில் அவர் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார்.

மணமகனும் நண்பர்களும் மண்டபத்திற்கு அருகே 400 மீற்றர் தொலைவில் வந்துகொண்ருந்தபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர் மாயமாகியுள்ளதாக பாதல் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்