11 ஆண்டுகளின் கனவு... முதல் பயணத்தில் விமானி செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Arbin Arbin in இந்தியா
190Shares

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானியாக பொறுப்பேற்ற முதல் பயணத்தில் தமது தாயாரையும் பாட்டியையும் அதே விமானத்தில் அழைத்து சென்று ஆசி பெற்றுள்ளார்.

முதற் காதல் போன்று முதன் முதலில் கிடைக்கும் வேலையும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக மாறுவதுண்டு பலருக்கும்.

அது நீண்ட பல ஆண்டுகள் கனவு கண்டு கிடைத்த வேலை என்றால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பதில்லை.

சென்னையை சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் என்பவருக்கு விமானியாக பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட 11 ஆண்டுகளின் கனவு.

தற்போது இண்டிகோ நிறுவனத்தில் விமானியாக பொறுப்பேற்றது பிரதீபின் மகிழ்ச்சிக்கு எல்லையை இல்லாமல் போனது.

ஆனால் தனது மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாடாமல் அந்த இளைஞர் நெகிழ வைக்கும் செயல் ஒன்றை செய்துள்ளார்.

பணியில் சேர்ந்த முதல் நாளில் முதல் பயணத்தின்போது தனது தாயாரையும் பாட்டியையும் அந்த விமானத்தில் அவர் அழைத்து சென்றுள்ளார்.

மட்டுமின்றி விமானம் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு தாயாரிடமும் பாட்டியிடமும் ஆசிபெற்றது, அப்போது விமானத்தில் இருந்த பயணிகளின் கண்களை குளமாக்கியுள்ளது.

பேரப்பிள்ளையின் கைகளில் முத்தமிட்டு கண்கள் பனிக்க அந்த மூதாட்டியும் விமானியின் அறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தை பிரதீபின் நெருங்கிய நண்பரும் கல்லூரி தோழனுமான துவாரகநாத் என்ற இளைஞரே வீடியோவாக பதிவு செய்து சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்