இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? வெளியான மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
754Shares

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

தற்போது பாஜக கட்சியின் நரேந்திர மோடி அரசின் ஆட்சி நடந்து வருகின்ற நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பை தந்தி தொலைக்காட்சி நடத்தியது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட அதன் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தேர்தல் வரும்போது முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.- தினகரன் கட்சியான அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்