9 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்புடன் பொலிசில் சிக்கிய நபர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் அரிய வகை பாம்பு ஒன்றை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த பாம்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

takshak என்ற அரியவகை பாம்பினை கடத்த முற்பட்டபோதே குற்றவாளிகள் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

வெள்ளியன்று காலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே கைது நடந்துள்ளது.

வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலுக்கு கைமாறும் நிலையில் பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

தற்போது மீட்கப்பட்ட பாம்பினை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும், உரிய பாதுகாப்புடன் வனத்திலேயே விட்டுவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்