கஜா புயல்: இதுவரை குவிந்துள்ள நிவாரண நிதி எத்தனை கோடி தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயல் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிட நன்கொடைகள் வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தது.

அதன்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கியவர்களின் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.

நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்