தீ விபத்தில் சிக்கிய 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து: அதன் பின்னர் நடந்த வியக்க வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் 40 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கியதில் அனைவரும் வியக்க வைக்கும் வகையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பாகமதி அபரிஷ நகரிலேயே நடுக்க வைக்கும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த தீ விபத்தில் அந்த பேருந்து முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. பேருந்து தீ விபத்துக்குள்ளானது தெரியவந்த உடன் மாணவர்களும் ஆசிரியர்களும் துரிதமாக செயல்பட்டு வெளியேறியுள்ளது பெரும் உயிரிழப்பை தவிர்த்துள்ளது.

பேருந்துக்குள் ஏற்பட்ட மின் இணைப்பு கோளாறு மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் 8 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வெளியான வீடியோவானது சமுக வலைதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்