நடவடிக்கை எடுப்பேன்: எச்சரிக்கை விடுத்து இளையராஜா வெளியிட்ட வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

காப்புரிமையை விவகாரம் தொடர்பாக இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையானால் சட்டப்படி குற்றமாகும்.

என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்கள் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-ல் மெம்பராக இருந்தேன்.

நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன்.

நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம்.

அதற்கு பணம்கொடுக்கதேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா? என்பாடல் என்றபோதும் பணம் எப்படி இல்லாமல் போகும். பங்கு ஒரு சின்ன தொகை.

சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறோம். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும்; முன்னோட்டமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...