யாரும் உதவ முன்வரவில்லை: இளைஞரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பொது மக்கள் மத்தியில் ஆட்டோ ஓட்டுனர் இளைஞரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இளைஞர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு நின்றிருந்தனர். ஆனால் யாரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

மாறாக தங்கள் கைகளில் இருந்த செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

ஒரேயொரு போக்குவரத்து காவலர் மட்டும் அந்த ஆட்டோ ஓட்டுனரை தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்து பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனரை பொலிசார் பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அவரது பெயர் காஜா (30) என்றும் உயிரிழந்தவர் குரேஷி (35) என்றும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இடையே ஆட்டோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கள் கண்முன்னே நடந்த கொலையை தடுக்க முன்வராமல், செல்போனில் படம் பிடித்த பொதுமக்களின் செயல் ஐதராபாத் வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers