ரீசார்ஜ் கடைக்கு வந்த திருமணமான 40 வயது பெண்ணை மயக்கிய ராஜேஷ்: பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 40 வயது பெண் கூடா நட்பால், பரிதாபமாக இறந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குலசேகரம் சிற்றாறு பட்டணங்கால்வாயில் கடந்த 20-ஆம் திகதி 40 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார், அது குறித்து நடத்திய விசாரணையில், அவர் பிணந்தோடு சேக்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி லில்லிபாய் என்பது தெரியவந்தது.

அதன் பின் மருத்துவ அறிக்கையில், அவர் விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்தியதால் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனால் பொலிசார் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த போது அவரின் செல்போனும் இல்லை என்பதால், பொலிசார் அவருடன் செல்போனில் பேசிவர்கள் யார் என்ற பெயர் பட்டியலை சேகரித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது லில்லிபாயுடன் கடைசியாக பேசிய பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஷ் என்பவருடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செல்போன் கடையுடன், ஸ்டூடியோவும் நடத்திவரும் ராஜேஷ், சம்பவத்தன்று மட்டுமல்ல பல நாட்கள் பல மணி நேரம் லில்லிபாயுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது.

அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், லில்லிபாய் தனது செல்போனில் உள்ள சிம்கார்டுக்கு ரீஜார்ஜ் செய்ய வந்த போது ரீசார்ஜ் நோட்டில் அவர் எழுதி வைத்த நம்பர் மூலம், அவரிடம் நட்பாக பழகினேன்.

என்னுடைய பேச்சில் மயங்கிய அவர் சிம்கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய அடிக்கடி வந்து சென்றார். காதல் வலையில் வீழ்ந்தார். இதை தான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவருடன் பல ஊர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன்.

மேலும் தான் வியாபாரத்தை விரிவாக்குவதாக கூறி லில்லிபாயிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் கடனாக வாங்கினேன்.ஒரு கட்டத்தில் தன்னுடைய நகைகளை திருப்பி தருமாறு அவர் கேட்டார்.

இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அப்போது தான் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். அதற்காக அவரை சமாதானப்படுத்துவது போன்று காரில் ஏற்றி கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றேன்.

அங்கு இருவரும் ஒரே அறையில் தங்கினோம். அதன் பின் நள்ளிரவில் லில்லிபாய்க்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்.

இதையடுத்து அவரது உடலை காரில் ஏற்றிச் சென்று சிற்றாறு கால்வாய் பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டுக்கு சென்று விட்டதாகவும், லில்லிபாய்க்கு நடந்த இறுதி சடங்கின் போது,பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் கலந்து கொண்டு திரும்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்