ஊரில் பலரிடம் ஏமாற்று வேலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற ஆசிரியை

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் ஏலசீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற பெண் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் விமல துரைநாதன் (40). இவருடைய மனைவி பியூலா (36) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசியராக பணியாற்றி வந்தார்.

தம்பதியினர் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு முதல் மரக்காணம் பகுதியில் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளனர்.

பொதுமக்களில் சிலர் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான சீட்டுக்களில் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் சரியாக பணத்தை திரும்பி கொடுத்து வந்த தம்பதியினர், நாளடைவில் சரியாக பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த மரக்காணம் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தம்பதியினர் குறித்து மேற்கொண்ட விசாரணையில் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் அறிந்து பியூலா வெளியூருக்கு தப்பி செல்ல போவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் விரைந்து சென்ற பொலிஸார், தப்பி செல்ல முயன்ற பியூலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவருடைய கணவர் விமல துரைநாதனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்