என் மகன் உயிரை காப்பாற்றுங்கள்: பிரபல மூத்த நடிகை கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த மலையாள திரைப்பட நடிகை சேதுலட்சுமி தனது மகன் குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை சேதுலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், என் மகன் கிஷோரின் இரு சிறுநீரகங்களுக்கு செயலிழந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

கரமனா பிஆர்எஸ் மருத்துவமனையில் தான் கிஷோர் சிகிச்சை பெற்று வருகிறான்.

இரண்டு நாளுக்கு ஒருமுறை அவனுக்கு டயாலிஸிஸ் செய்ய வேண்டும், அதே போல ரத்தமும் மாற்ற வேண்டும். இதோடு டயாலிஸுடன் ரூ.6500 மதிப்புள்ள ஊசி செலுத்த வேண்டியது அவசியம்.

டயாலிஸுக்கு 1200-ம், ரத்தத்துக்கு ரூ 900-ம் செலவாகிறது. இதோடு மருந்து, மாத்திரைகள் செலவும் உள்ளது.

மேலும், கிஷோரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கவனிக்கவும் பணம் வேண்டும். நான் மலையாள திரையுலக சங்க உறுப்பினர் தான். அவர்களிடம் இது பற்றி கூறிவிட்டேன்.

எல்லோரும் என் மகனுக்கு உதவி செய்து அவன் உயிரை காப்பாற்ற வேண்டும்.

கிஷோரின் சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் அதற்கு பெருமளவு உதவி செய்து என் மகள் வெகுநாட்கள் வாழ உதவ வேண்டும் என கண்ணீருடன் கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...