பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த நடிகர்: வழிமறித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் பாழடைந்த கிணற்றுக்குள் குடும்பத்தினருடன் விழுந்த நடிகர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் சினிமா துணை நடிகர் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினியின் ‘2.o’ படத்தில் கிராபிஃக்ஸ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

இவர், இன்று அதிகாலை தனது மனைவி மாயா மற்றும் 4 வயது ஆண் குழந்தை கீர்த்திஸ் ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து மின்னூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் விழுந்தது.

பாழடைந்த அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கார் நொறுங்கியது. துணை நடிகர் சுந்தரமூர்த்தி, அவரின் மனைவி, குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

1 மணிநேரத்திற்கு பின்னர், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு பொலிசார் மேலே கொண்டு வந்தனர். குழந்தையை மீட்டபோது கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு இடை மறித்தது. பாம்பிடம் சிக்காமல் குழந்தையை கார் டிரைவர் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார்.

துணை நடிகர் உள்பட மூவருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers