பெற்ற தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்: திடுக்கிடும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்ற தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரை சேர்ந்தவர் யோகேஷ் ஷினோய் (52). இவர் தனது தாய் லலிதா (80) உடன் வசித்து வந்தார்.

யோகேஷின் மனைவி அவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார்.இதன் பின்னர் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இதோடு லலிதாவுக்கு அதிகளவு மருத்துவத்துக்கும் மாத்திரைகளுக்கும் செலவாகியுள்ளது.

ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த யோகேஷால் இதை சமாளிக்க முடியவில்லை. இது சம்மந்தமாக தாய்க்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

நேற்றிரவு இருவரும் அதிக சத்தத்துடன் சண்டை போட்டனர்.

இதையடுத்து பயந்து போன அக்கம்பக்கத்தினர் பொலிசார் இது குறித்து தகவல் கொடுத்தனர்.

ஆனால் பொலிசார் வருவதற்குள், தலையணையால் லலிதாவின் முகத்தை யோகேஷ் அமுக்கினார். பின்னர் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதையடுத்து அங்கு பொலிசார் வந்த நிலையில் யோகேஷை கைது செய்து, லலிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டேன் என யோகேஷ் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்