மேலே எழும்ப முடியாமல் திணறிய விமானம்: ஓடுதள விளிம்புக்கு வந்ததால் பதறிய பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விமானம் ஒன்று மேலெழும்ப முடியாமல் ஓடுதள விளிம்பு வரை சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் FlyScoot விமானம் இன்று காலை 115 பயணிகளுடன் புறப்பட்டது.

விமானமானது ஓடுதளத்தில் அதிவேகத்தில் சென்ற நிலையில் மேலே எழும்ப முடியவில்லை. பல கட்ட முயற்சிகளும் பலனளிக்காததால் ஓடுதளத்தின் தடுப்புச் சுவரில் விமானம் மோதும் சூழல் உருவானது.

இதனால் பதற்றம் சூழ்ந்து கொண்ட நிலையில், சமயோசிதமாக செயல்பட்ட விமானி விமானத்தின் வேகத்தைக் லாவகமாக குறைத்தார்.

இதன்பின்னர் ஓடுதளத்தின் விளிம்பில் சென்று விமானம் நின்றதால் பயணிகள் உறைந்தனர்.

இதனையடுத்து முனையத்திற்கு விமானம் கொண்டு வரப்பட்ட நிலையில் பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

இதன் பிறகு பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்