5 வருட காதல்! காதலி எதிரில் காதலன் செய்த மோசமான செயல்..நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்தும், 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வித்யாவிடம் பேசுவதை தவிர்த்து வந்த அரவிந்த், நேற்று வேறொரு பெண்ணை அழைத்து வந்து, அவரையே காதலிப்பதாக கூறி வித்யாவிடம் காண்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்ற வித்யா நடந்ததை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார். இதையடுத்து உறங்கச் சென்ற மகள் வித்யா அதிகாலையில் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள கிணற்றில் வித்யாவின் காலனி மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி வித்யாவின் உடலை மீட்டனர்.

இதையடுத்து காவல் நிலையத்தில் வித்யாவின் பெற்றோர் அரவிந்த் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்