தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியது இதுதான்: நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் எல்லா வளங்களும் இருந்தாலும் அவற்றை நிர்வகிக்க அவர்களுக்கு தெரியவில்லை. இது கல்வியின் ஊடாகவே சாத்தியமாகும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நில் சூழல் தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் தனியார் நாளிதழுக்கு அளித்த நேர்முகம் ஒன்றில்,

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது.

அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள். ஆனால் அவர்கள் யார், அவர்கள் திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டார்கள்.

எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப் பெறுவதைவிட மிகவும் இது முக்கியமானது எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார்.

அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers