தம்பியை உயிருக்கு உயிராக காதலித்த அக்கா: நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தம்பி முறையுள்ளவரை இளம் பெண் காதலித்த நிலையில், தந்தை கண்டித்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவாட்டத்தின் பட்டானூர் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகள் ஹரிதா (18). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது உறவினரான நிர்மல்ராஜ் என்பவரை காதலித்து வந்தார். இதையறிந்த சத்தியமூர்த்தி, தனது மகளை அழைத்து, நிர்மல்ராஜ் உனக்கு தம்பி முறையாவார் என்று கூறி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த ஹரிதா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஹரிதா இறந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்