உயிருக்கு ஆபத்து! நடிகை வனிதா மனுத்தாக்கல்- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்

Report Print Kabilan in இந்தியா

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகை வனிதா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள அவரது தந்தைக்கு சொந்தமான பங்களாவில், சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு நடத்தினார்.

இவர் விஜயகுமாரின் 2வது மனைவியும், நடிகையுமான மஞ்சுளாவிற்கு பிறந்தவர் ஆவார். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா அந்த பங்களாவை விட்டு வெளியேறவில்லை.

இதனால் அவரது தந்தை விஜயகுமார் பொலிஸில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பொலிசார் இந்த விடயத்தில் தலையிட்டு வனிதா மற்றும் அவரது நண்பர்களை வீட்டியில் இருந்து வெளியேற்றினர்.

அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், அவர்களின் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வனிதா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வனிதாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தனது தாயாருக்கு சொந்தமான சொத்துக்களை தனது தந்தையும், அவரது முதல் மனைவி மற்றும் மகன் அருண்விஜய் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக வனிதா அளித்த புகாரை விஜயகுமாரும், அருண்விஜயும் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers