நடிகர் ராதாரவி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: சின்மயி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவிக்கும், சின்மயிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியியை, அதன் தலைவரான ராதாரவி நீக்கியதையடுத்து பிரச்சனை தொடர்ந்துள்ளது.

மேலும், ராதாரவி குறித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவி தனது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் பட்டம் பொய்யானது என்றும் இதுகுறித்து மலேசியாவின் முக்கிய அதிகாரிக்கும் மின்னஞ்சல் அனுப்பியதையும் வெளியிட்டார்.

இந்நிலையில், சின்மயி கூறியது அனைத்தும் பொய் என்றும் ஆதாங்கள் உள்ளது, விரைவில் சின்மயி மீது நடவடிக்கை எடுப்பேன், சும்மாவிடமாட்டேன் என ராதாரவி கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, நான் கூறிய இந்தச் செய்தியை நடிகர் ராதாரவி, பத்திரிகைகளில் அந்த மெயிலே பொய் என கூறியுள்ளார்.

நான் பொய் சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers