காதலி இறந்த சோகம்... பைத்தியமாக திரிந்த காதலன்: இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21 வயதான ஹேமந்த். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்.

சென்னையில் தங்கி வேலை பார்த்த போது மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா(19) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

தங்களது காதல் தொடர்பாக இருவரும் பெற்றோர்களிடம் தெரிவிக்க திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கிறிஸ்டினா, கடந்த 28 ஆம் திகதி சென்னை மதுரவாயல் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

காதலி தற்கொலை செய்து கொண்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக மனவருத்தத்தில் இருந்து வந்த ஹேமந்த் புதுச்சேரியில் உள்ள தனது குடியிருப்பில்வ் செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹேமந்த் தற்கொலை சம்பவம் தொடர்பில் ரெட்டியார்பாளையம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்