சொந்த தந்தையால் சீரழிக்கப்பட்ட மகள்... பேஸ்புக் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்: கதறும் தாயார்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரில் 10-ஆம் வகுப்பு மாணவியை தந்தை உள்ளிட்ட 22 பேர் துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தந்தை உள்ளிட்ட 7 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பொலிசார் மெத்தனமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்ணூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் மகளிர் பொலிசாரை அணுகி புகார் அளித்துள்ளனர்.

ஆனால் குறித்த வழக்கு தொடர்பில் மேற்கொண்டு விசாரணைக்கு உத்தரவிடாத மகளிர் பொலிசார், தளிப்பறம்பு பகுதி பொலிசாருக்கு வழக்கை கைமாறியுள்ளனர்.

இந்த நிலையில் தளிப்பறம்பு பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அதிரவைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த தந்தையே பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக விசாரணையில் வெளிப்படுத்திய குறித்த சிறுமி,

அதன் பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான சிலருடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், சொந்த குடியிருப்பிலும், அறிமுகமானவர்களின் குடியிருப்புகளிலும், தனியார் விடுதிகளிலும் தாம் செல்ல நேர்ந்ததாகவும், இதில் 22 பேர் சம்பத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று அந்த காட்சிகளை படம் பிடித்து சகோதரரிடம் இருந்து பணம் பறிக்க முயலவே நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது குறித்த சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டவர்கள் பொலிசாரின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers