யூ டியூப் உலகில் பிரபலமாக இருந்த மஸ்தானம்மா பாட்டி 107 வயதில் நேற்று காலமானார்.
யூ டியூப் வீடியோக்களில் வயதான மூதாட்டி ஒருவர் சமையல் செய்வது மிக பிரபலம்.
யூ டியூபில் கண்ட்ரி புட்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட சேனலில்தான் இந்த மூதாட்டி சமைத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.
குண்டூரை சேர்ந்த மஸ்தானம்மா என்ற இவருக்கு நிறைய பேர் ரசிகர்களாக இருந்த நிலையில் அவரின் யூடியூப் சேனலுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான subscribers-கள் இருந்தனர்.
இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினர் கூட இவரது வீடியோக்களை விரும்பி பார்ப்பது வழக்கம்.
முக்கியமாக இவர் செய்யும் அசைவ உணவுகள், கடல் உணவுகள் மிக மிக பிரபலம்.
ஆனால் கடந்த 4 மாதங்களாக இவரது வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. வேறு சிலர் சமைக்கும் வீடியோக்கள் மட்டுமே வந்தது.
இந்த நிலையில் இந்த சேனலுக்கு சொந்தக்காரரான லட்சுமண் என்பர், மஸ்தானம்மா வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். மஸ்தானம்மாவின் இறுதிச்சடங்கு வீடியோவை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு மக்கள் கண்ணீருடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.