திருமணமான இளம்பெண்ணின் விபரீத ஆசை: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் 17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்ற பெண் ஒருவரை பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் 17 வயதான ராஜா.

தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (23) என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் அறியாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை.

இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்துள்ளார்.

புகாரை பதிவு செய்த பொலிஸார் ராஜாவையும், சுவேதாவையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.

சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்