ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்: அடுத்து நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் உயிரோரு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ஷரவன் மெடோ. இவருக்கு திருமணமான ஒரு பணக்கார பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பெண்ணுடன் ஷரவன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

இதையறிந்து அப்பெண்ணின் மாமனார் ஆத்திரமடைந்தார். ஊரில் செல்வாக்கு மிக்கவரான அவர் தனது ஆட்களுடன் ஷரவன் வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த ஷரவனை வீட்டுக்கு வெளியில் இழுத்து வந்து அனைவரும் அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு ஷரவனை தூக்கி சென்று உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து ஷரவனின் சகோதரர் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷரவனின் உடலை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்