உயிருக்கு போராடும் எனது மகனை காப்பாற்ற உதவுங்கள் என கண்ணீர் விட்டு கெஞ்சிய நடிகை: குவிந்த கரங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர் உதவியதன் பேரில் மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் , இவரது மகன் கிஷோருக்கு இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்படைந்துவிட்டன.

கிஷோர் உயிர்வாழ வேண்டுமென்றால், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 35 லட்சம் பணம் வேண்டுமென்று கூறியுள்ளனர்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால், வீடியோ ஒன்றில் அனைவரிடமும் தனது மகனை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க வேண்டினார்.

இதனைத்தொடர்ந்து, இவருக்கு உதவிகள் வந்தன, ஆனால், சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை பொன்னம்மா பாபு, தன்னிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் சிறுநீரகத்தை தானம் செய்கிறேன் என முன்வந்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சேதுலட்சுமி, பொன்னம்மா பாபுவின் உதவியால் எனது மகன் வாழ்க்கை பெறப்போகிறான், இதனால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்