தமிழக அமைச்சரை வெட்டும் நோக்கில் அரிவாளுடன் ஓடிய நபர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது, அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெட்டும் நோக்கில் அரிவாளுடன் மர்ம நபர் ஒருவர் ஓடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டம் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து உணவு கூட இல்லாமல் தவித்து வந்தனர்.

அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கைத்தறி மாற்று துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கடந்த 18ம் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்த சென்றார்.

அப்போது அவரது வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் சூழ்ந்து நின்று காரை அடித்து நொறுக்கினர். இதிலிருந்து தப்பிக்க முயன்ற அமைச்சர், இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுசம்மந்தமாக வடக்கு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (53), கன்னித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30), மணல்மேடு பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த கவியரசன் (30) ஆகியோரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று ஒருவர் அரிவாளுடன் அமைச்சரை நோக்கி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்