மீண்டும் நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் வந்த மகள் வனிதா: விஜயகுமார் என்ன செய்தார்?

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் அவரின் மகளும் நடிகயுமான வனிதா மீண்டும் நுழைந்துள்ள நிலையில் அது குறித்து விஜயகுமார் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில் ஷூட்டிங் நடத்த வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் பொலிஸ் புகார் அளித்தார் நடிகர் விஜயகுமார்.

இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும், வனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று மறுபடியும் வனிதா ஆலப்பாக்கத்தில் இருக்கிற வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

இது குறித்து பேசிய விஜயகுமார், தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான், வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்துள்ளேன்.

இதுக்கு மேலே இதைப் பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லை என்று வருத்தமாகச் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்