தமிழ் மக்களே 10 ஆம் திகதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும்... இது எனது இறுதி வீடியோ! பிரபல ராமர் விவகாரத்தில் என்ன நடந்தது?

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் தற்போது மூலிகை பெட்ரோல் ராமர் குறித்த பேச்சுதான் பரபரப்பா பேசப்பட்டு வருகிறது.

1990 களின் இறுதியில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.

மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என்று பெயரிட்டு விற்பனையும் செய்தார்.

இதனிடையே, மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது.

து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இந்நிலையில், ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.

இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். என் உயிரை பணயம் வைத்தாவது உங்களை கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன்.

10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணோளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இவரது வீடியோவை வெளியிட்ட எல்.எம்.ஈ.எஸ். நிறுவன தலைவர் பிரேமானந்த் சேதுராஜன் தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்களில் பலபேர் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பற்றி வீடியோ போடுங்கள் என்று கேட்டிருந்தனர். அதனால்தான் நாங்கள் அவரை தொடர்புகொண்டு வீடியோ எடுத்தோம்.

அவர்கள் எங்களை வைத்துக்கொண்டு மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி செய்து காட்டிய பரிசோதனை போலியானவை, வீடியோக்களை எடிட் செய்யும்போது, எடிட்டர்கள் ராமர் செய்த ஏமாற்றுதணத்தை கண்டுபிடித்தனர்.

அவர் எங்களிடம் செய்துகாட்டிய இந்த இரண்டு செய்முறைகளின்போதுமே இவ்வாறு ஏமாற்றியிருக்கிறார்.

ப்போதுகூட சொல்கிறேன் நாங்கள் அவருடன் இருக்கத் தயாரக இருக்கிறோம். ஆனால், அவர் எங்களிடம் செய்து காட்டிய செய்முறை தவறான ஒன்று, அதில் பிரச்சனை இருக்கிறது. நான் ஒரு அறிவியல் சேனல் வைத்துக்கொண்டு, குச்சியை போட்டால் நீரிலுள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் பிரிந்துவிடும் என்றால் என்னைவிட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது என கூறியுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்