அப்பா...தனியாக இருக்கிறார் அம்மா என மனம் இறங்கிய குழந்தைகள்: இறுதியில் சைக்கோவாக மாறி குழந்தைகளை கொன்ற கொடூரன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாபன் - செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

செல்வராணிக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், ஒரு கை மற்றும் கால் முடங்கிப்போயிருக்கிறது. ஆகையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கச் சிரமப்பட்டுவந்துள்ளார் செல்வராணி. பத்மநாபனின் அம்மா பிரேமாதான் குழந்தைகளைக் கவனித்துவந்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே பந்தமனாபனுக்கும் செல்வராணிக்கும் ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. பத்மநாபன் குடிக்கு அடிமையானதால், வீட்டில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பந்தமநாபன், செல்வராணியுடன் தகராற்றில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டு, வீட்டுக்கு வந்த பொலிசார் , இப்போ நீங்க இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்ல. உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு காலையில ஸ்டேஷன் வந்திருங்க என்று கூறி செல்வராணியை அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தனது பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிய செல்வராணி, தனது குழந்தைகளையும் கூப்பிட்டுள்ளார். ஆனால் குழந்தைகளோ… ``அப்பா போதையில் இருக்கார். ஏதாச்சும் ஆகிரும்" நாங்க அப்பாகூடவே இருக்கிறோம் என்று செல்வராணியுடன் செல்ல மறுத்துள்ளனர்.

காலையில், செல்வராணியின் தாய் வீட்டுக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் அசைவற்று இருந்ததால் ,அருகில் சென்று அவர்களை எழுப்பிய பிரேமா அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக பொலிசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ழந்தைகள் தூங்கும்போது தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்திருக்கக்கூடும் என்று காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடித்துவிட்டு சைக்கோவாக மாறிவிடும் பத்மநாதன் இப்படி குழந்தைகளை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்