தன் ஆசைக்கு இணங்க இளம் பெண்ணை வற்புறுத்திய பேராசிரியர்! இருக்கையில் அமர வைத்து அப்படி பேசினார் என கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவி காமராஜர் பல்கலை பேராசிரியர் தன்னுடைய கையை பிடித்து இழுத்ததாகவும், தகாத வார்த்தையில் பேசியதாவும் கூறி புகார் அளித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறையின் ஆராய்ச்சி மாணவி கவிதா(25).

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் ல் பிஎச்டி முழுநேர ஆராய்ச்சி மாணவியாக உள்ளேன். ஒன்றரை ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன்.

எனக்கு வழிகாட்டியாகவும், மேற்பார்வையாளராகவும் துறைத்தலைவர் கர்ணமகாராஜன் நியமிக்கப்பட்டார். நான் என்னுடைய படிப்பில் சேர்வதற்கு சில மாதங்கள் ஆனதால், 2 லட்சம் ரூபாய் கொடுத்து சேர்ந்தேன்.

அதன் பின் முறையாக நான் என்னுடைய ஆய்வுப் பணிகளை செய்து வருகிறேன்.

இந்நிலையில் கர்ணமகாராஜன் அவருடைய அறையில் இருக்கை தந்து அமரவைத்தார். இடையில் கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்தி, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் காம இச்சையை தெரிவிக்கும் வகையில் பேசினார்.

என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். ஒரு கட்டத்தில் படிப்பை விட்டு சென்றுவிடலாமா என்று யோசித்தேன். கடந்த நவம்பர் மாதம் கேரள பல்கலைகழகத்தில் என் ஆராய்ச்சி படிப்பிற்கான தகவல் சேகரிப்பிற்கு ஒரு மாதம் அனுமதி கேட்டதற்கு மறுத்தார்.

அதன் பின் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடுகிறேன் என்று நெருங்கினார்.

அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக அவரிடம் தெரிவிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் திகதி சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன்.

போன் செய்தார் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி குறுந்தகவல், வாட்ஸ் அப் போன்றவைகளில் ஆப்செண்ட் போடுவேன் என்று மிரட்டினார்.

ஒரு மாதம் தகவல் சேகரிப்பு பணி முடிந்து திரும்பியபோது, எனக்கு ஒரு மெமோ கொடுத்து விரட்டி விட்டார். என் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று கெஞ்சிய போது உன் எதிர்காலம் நீ என்னிடம் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது எனக்கூறி என் கையைப் பிடித்தார்.

நான் அதிர்ச்சி அடைந்தேன். கதறி அழுதேன். அதை தனது மொபைல் போனில் கர்ணமகாராஜன் வீடியோ எடுத்து ரசித்தார். பெல் அடித்து ஆபீஸ் ஊழியர்களை வரவழைத்து என்னை அலுவலகத்திலிருந்து விரட்டியடித்தார். மன அழுத்தத்தினால் விடுதி வாசலில் மயங்கி கீழே விழுந்தேன்.

என்னை பல்கலை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர் பாலியல் தொல்லை தந்து, மனஉளைச்சலை கொடுத்த துறைத்தலைவர் கர்ணமகாராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கர்ணமகாராஜனிடம் கேட்ட போது, அந்த பெண் சொல்வது எல்லாம் பொய், என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த வழக்கில், அவர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளள நிலையில், மற்றொரு பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்