சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகை கைது

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை என அவருடைய வீட்டார் பொலிஸில் புகார் கொடுத்திருந்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண்ட் நகர் மார்க்கெட் அருகே இறக்கி விடும்படி உதானி கூறியதால், அங்கே இறக்கிவிட்டதாகவும், அவர் வேறு ஒரு காரில் ஏறி சென்றதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த 4ம் தேதியன்று பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மறுநாள் வரை சடலம் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், ஆடைகளை வைத்து அது என்னுடைய தந்தை தான் என உதானியின் மகன் கூறியுள்ளான்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உதானியின் செல்போன் அழைப்புகளை வைத்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், மகாராஷ்ட்ரா அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் பவார் மூலம், கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளிட்ட பல பெண்களுடன் உதானி தொடர்பு வைத்திருந்தது தெரியவந்து.

இதனையடுத்து செல்போனில் சம்மந்தப்பட்ட சில பெண்களுடன், சச்சின் பவார், டிவி நடிகையும் மாடலுமான டிவோலீனா பட்டாச்சார்ஜி உள்பட 3 பேரை கைது செய்து, தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்களை கைது செய்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

டிவி நடிகை டிவோலீனா பட்டாச்சார்ஜி, ’சாத் நிபானா சாதியா’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் பிரபலமாகி விருதுகளை பெற்றுள்ளார். இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் அதிக ஊதியம் பெரும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பித்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்