பெற்றோருக்கு தெரியாமல் காதலன் வீட்டில் தங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! கதறும் குடும்பத்தினர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெற்றோருக்கு தெரியாமல் காதலன் வீட்டில் தங்கியிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டதால், பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது இவருக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்கும் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மஞ்சுளாவின் தாய்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சொந்த ஊருக்கு தாயை பார்க்க சென்றுள்ளார்.

தாயை பார்த்த அவர் அதன் பின் மீண்டும் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார். பெற்றோரும் அவள் வேலைக்கு சென்றுவிட்டால் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, மஞ்சுளாவின் நண்பர்கள் அவள் கம்பெனிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் மகள் எங்கே போனால் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த அவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் மஞ்சுளா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் அவர்களிடம் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், 3 நாட்கள் யாருக்கும் தெரியாமல் மஞ்சுளாவை கார்த்திக் தனது அறையில் மறைத்து வைத்துள்ளார்.

நேற்றிரவு வீட்டை விட்டு மஞ்சுளாவை கார்த்திக் வெளியேறச் சொன்ன போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மஞ்சுளா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலைக்கு போய்ட்டு வாரேன் சொன்னவ இப்படி இறந்துபோயிட்டாளே என்று பெற்றோர் கதறி அழுதுகொண்டே, எங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை, இது கொலை என்று கூறியுள்ளனர்.

மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், கார்த்திக்கை கைது செய்துள்ள பொலிசார், அவரது தாய் மற்றும் சகோதரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்