கணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணம்: வாழ்த்தும், திட்டித் தீர்க்கும் நெட்டிசன்களும்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யா இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமே தமிழகத்தை உலுக்கியது.

இந்நிலையில் கெளசல்யா இன்று சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமூகவலைத்தளங்களில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இது ஒரு புறம் இருந்தாலும், ஒரு சிலர் கெளசல்யாவின் திருமணம் குறித்து சற்று கோபமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்