பிரித்தானியாவில் இருந்து திரும்பிய கணவன்: விமான நிலையத்தில் மனைவியை தவிக்கவிட்டு வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வாட்ஸாப்பில் "தலாக்" அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர் கடந்த 2003ம் ஆண்டு அஜீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாகவே தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இதனை சரிசெய்வதற்காக இருவரும் நவம்பர் 30ம் தேதியன்று இந்தியா வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் மனைவியை தவிக்கவிட்டு, ஜாவித் மட்டும் அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். அங்கிருந்து மனைவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தலாக் எனக்கூறி ஒரு குறுஞ்செய்து அனுப்பி விவாகரத்து செய்துள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட அஜீஸ் தனக்கு நீதி வழங்குமாறு மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்