தூக்கத்திலேயே காலமான மூக்குப்பொடி சித்தர்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி

Report Print Fathima Fathima in இந்தியா

சமீபகாலமாக பரபரப்பை கிளப்பி வந்த மூக்குப்பொடி சித்தர் தூக்கத்திலேயே இன்று காலமானார்.

தமிழகத்தில் மிகப்பிரபலம் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இவர்கள் தவிர அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

இந்நிலையில் சமீபகாலமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மூக்குப்பொடி சித்தர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் ரமணாஷ்வர்மம் அருகே சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.

இரவு நேரத்தில் அவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்திருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று மாலை தனியார் திரையரங்கு உரிமையாளருக்கு சொந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்