பல ஆண்களுடன் தொடர்பு..தட்டிக் கேட்ட கணவனுக்கு மனைவி செய்த செயல்! மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை பொலிசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். விவசாயியான இவருக்கு சோனியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சோனியாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கணவர் தட்டிக் கேட்டதால், இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திருவண்ணாமலையில் இருக்கும் 5 பேர் கொண்டகூலிப்படையினரின் உதவியை நாடியுள்ளார்.

அதன் பின் அந்த ஐந்து பேரும் ராஜலிங்கம் வீட்டில் இல்லாத நேரத்தில் சோனியாவின் உதவியுடன் அங்கு மறைந்துள்ளனர்.

இதையடுத்து ராஜலிங்கம் வீட்டிற்குள் வந்தவுடன் அவரை தாக்கி கொலை செய்த அந்த கும்பல், அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று மேற்கூரையில் உடலை தொங்கவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் செய்தது போலவே சோனியாவும் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார்.

ராஜாலிங்கம் இறப்பு குறித்து பொலிசார் அவரின் மகன் ஹரிசிடம் நடத்திய விசாரணைக்கு பின்னரே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சோனியாவை கைது செய்த பொலிசார், கூலிப்படையை சேர்ந்த அஜித், சிவக்குமார், பாலாஜி, காளிமுத்து ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்