தமிழர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்: வைரமுத்து குற்றச்சாட்டு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மீட்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கவிஞர் வைரமுத்து குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை வல்லம் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வைரமுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடுகளை வழங்கினார். அங்கு பேசிய வைரமுத்து புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம் என்று சவால்விட்டு செயல்படுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வளசரவாக்கத்தில் உணவகம் திறக்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தரையில் விழுந்து கிடக்கிற தென்னைமரங்கள் அகற்றப்படவில்லை, நிமிர்த்தப்படவில்லை.சிதைந்துபோயிருக்கிற வீடுகளுக்குக் கூரைகள் இல்லை.

தென்னைமரங்களைப் போலவே தமிழர்களும் ஒரு பெரிய அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு மீட்கப்பட வேண்டும் என்றால், மீட்புப் பணிகள் விரைந்து செயலாற்றப்பட வேண்டும் என்பது என் எண்ணம்.

மேலும், விவசாயிகளின் வாழ்வும் வீழ்ந்துகிடக்கும் தென்னைமரங்களைப் போலவே பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்