விஷப்பாம்புடன் தைரியமாக சண்டை போட்டு அதை அப்படியே முழுங்கிய கோழி! வெளியான ஆச்சரிய வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் விஷப்பாம்புடன் சண்டை போட்ட கோழி ஒன்று, அதை அப்படியே முழுங்கும் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் Kalburgi பகுதியில் இருக்கும் தோட்டத்தில் சிறிய விஷப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த கோழி, தன்னுடைய வாயை வைத்து பல முறை கொத்துகிறது. அதன் பின் அதை அப்படியே மெதுவாக வாயில் விழுங்கிறது.

இந்த காட்சியை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். பாம்பை முழுங்கும் வரை தலையை அசைத்த படி இருந்த கோழி இறுதியாக முழுங்கிய பின் சாதரணமாக நடந்து சென்றுள்ளது.

இந்த வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள், பார்க்கும் போதே வயிற்றை கலக்குகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்