அம்பானி மகள் திருமணத்தில் ரொமான்ஸ் டான்ஸ் ஆடி அனைவரையும் கிரங்கடித்த ஐஸ்வர்யா ராய்-அபிஷேக்!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடைபெற்று வரும் முகேஷ் அம்பானியின் மகள் திருமண சடங்கு நிகழ்ச்சியில், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் தன் கணவர் அபிசேக்பச்சனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இந்தியாவின் செல்வந்தர்களில் நம்பர் ஒன் செல்வந்தராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் வரும் 12-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கான சடங்குகள் ராஜஸ்தானின் உடைப்பூரில் இருக்கும் லேக் அரண்மனையில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் மிகப் பெரிய பாலிவுட் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் விளையாட்டு பிரபலங்கள் மற்று தொழிலதிபர்கள் என பலந்து கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் கலந்து கொண்டார்.

இதையடுத்து இந்த திருமண நிகழ்ச்சி வந்திருக்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் தன் கணவர் அபிசேக்பச்சனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இந்த ஜோடி இவர்கள் நடித்த குரு படத்தில் வரும் Tere Bina என்ற பாடலுக்கு நடனமாடினர்.

இவர்களின் நடனத்தை கண்ட அங்கிருந்தவர்கள் அப்படியே கண் அசைகாமல் பார்த்துள்ளனர். ஏனெனில் இவர்களின் ஜோடி பொருத்தம் அந்தளவிற்கு அழகாக இருந்துள்ளது.

இவர்கள் அந்த பாடலுக்கு நடனமாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்