காதல் கணவனை பறிகொடுத்த கெளசல்யா 2-வது திருமணம்: பிரபல இயக்குனர் ரஞ்சித் சொன்ன வார்த்தை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதல் கணவனை ஆணவப்படுகொலையால் பறிகொடுத்த கெளசல்யா நேற்று இரண்டாவது திருமணம் செய்திருந்த நிலையில், அவருக்கு பிரபல இயக்குனர் ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடுமலைபேட்டை பேருந்து நிலையம் அருகே தன் காதல் கணவர் சங்கருடன், கெளசல்யா கடந்த 2016-ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்த போது, சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின் இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு போராடி கெளசல்யா தண்டனை வாங்கிக் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று இவர் சக்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனர் ரஞ்சித், சகோதரி கவுசல்யாவின் திருமணம் தமிழகத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். சமூகத்தில் இது முக்கியமான மாற்றத்தை உருவாக்கும். இது பெரிய சமூக மாற்றத்தை நோக்கிய அடி என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers