இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே! தூங்கில் தொங்கிய காதலன் அடுத்த நொடியே காதலி எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் காதலன் தூங்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தனியாக சென்று வாழ்வோம் என முடிவு செய்து இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, கோபியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

கவிதாவும், கோபியின் உறவினர்களும் வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், தனிமையில் இருந்த கோபி, 'பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையே. அவர்களை ஒதுக்கிவிட்டு எப்படி வாழ்வது என்று கவலைப்பட்டு தூக்கில் தொங்கினார் கோபி.

இந்நிலையில், வெளியே சென்றிருந்த கவிதா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோபி பிணமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி இருக்கிறார். 'நாம சேர்ந்து ஒண்ணா பல வருஷம் வாழ்வோம்ன்னு சொன்னியே. இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே'னு கதறி இருக்கிறார். உடனே, அவரும் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்திருக்கிறார்.

கோபியின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்