இணையத்தில் வேகமாக பரவி வரும் சீமானின் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வில் சுமார் 3270 பேர் கலந்து கொண்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கமளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை நிகழ்த்தினார்.

பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. சீமானுக்கு தனியாக சாப்பிட இடம் ஒதுக்கியும் அவர் மக்களோடு தான் தரையில் அமர்ந்து சாப்பிடுவேன் என்று கூறிவிட்டார்.

சீமான் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்